‘டிஸ்னி யு டிவி’ தயாரிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’

siddarth-hansikaடிஸ்னி யு டிவி தயாரிக்கும் அடுத்த தமிழ்ப் படம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு.’ சுந்தர் .சி இயக்கும் இந்த படத்திற்கு இசை சத்யா, சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சுந்தர் .சி இயக்கிய ‘கலகலப்பு’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து யு டிவி மீண்டும் சுந்தர் சியுடன் இணைகிறது.

நகைச்சுவைப் படங்களுக்கென ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.  மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை இந்த விதத்தில் கொடுக்க முயற்சிக்கிறோம். இந்த ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட படங்களின் வரிசையில் இந்த படமும் சரியான விதத்தில் சென்று கொண்டிருக்கிறது” என யு டிவியின் தென்னிந்திய பிரிவு – ஸ்டுடியோ வர்த்தகத் தலைவரான ஜி. தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கும்பகோணம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்கள் ஜப்பான் நாட்டில் படமாக்கப்பட உள்ளன.

யு டிவி தயாரிப்பில் ஏப்ரல் மாதம் ‘சேட்டை’ படமும், ஜுன் மாதம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படமும், டிசம்பர் மாதம் கௌரவ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிகரம் தொடு’ படமும் வெளியாக உள்ளது.

Read Previous

‘அமீரின் ஆதிபகவன்’ குடும்பத்துடன் பார்க்கலாம் – அமீர்

Read Next

முத்தக் காட்சியில் அமலா பால் ?