லட்சுமி ராய் – வினய் காதலா ?

onbathula guru_00020லட்சுமி ராய், வினய் இருவரும் ஜோடியாக நடித்து வரும் படம் ‘ஒன்பதுல குரு.’

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது, இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் காதல் எனவும் கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக வினய் சமீபத்தில் கூறுகையில், “ நானும், லட்சுமி ராயும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே மாநிலம் என்பதால் எங்களுக்குள் ஒரு ‘புரிதல்’ இருக்கிறது.

‘ஒன்பதுல குரு’ படப்பிடிப்பின் போது என்னை ஒரு மட்டமான ஹோட்டலிலும், லட்சுமி ராயை ஒரு ஆடம்பர ஹோட்டலிலும் தங்க வைத்தார்கள். அதனால், சண்டை போட்டு, லட்சுமி ராய் தங்கியிருந்தத ஹோட்டலுக்கு மாறினேன்.

லட்சுமிராய் அழகான நடிகை, கவர்ச்சியான நடிகை, எந்த பந்தாவும் இல்லாதவர். படப்பிடிப்புக்கு வந்தாலும் அனைவருக்கும் வணக்கம் சொல்லும் நல்ல நடிகை,” என்றார்.

ம்ம்…‘புரிதல்’ எப்ப ‘காதல்’ ஆக மாறுமோ தெரியாது….

Read Previous

கடல், பாடம், பரீட்சை… – துளசி

Read Next

‘இது கதிர்வேலன் காதல்’ – நாளை ஷுட்டிங் ஆரம்பம்