ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், சூரி நடிக்கும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’.
இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் ஆரம்பமாகிறது. முதலில் உதயநிதி ஸ்டாலின் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட் உள்ளன. அடுத்த வாரம் முதல் நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சென்ற ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திலும் சந்தானம், சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.