விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் ‘தலைவா’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஓமன் நாட்டில் நடைபெற உள்ளது.
கடந்த பல நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வந்தது.
அடுத்ததாக ஓமன் நாட்டிற்குச் செல்லும் படப்பிடிப்புக் குழுவினர், அங்கு ஒரு சில ஆக்ஷன் காட்சிகளையும், சில பாடல் காட்சிகளையும் படமாக்க இருக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. அநேகமாக அடுத்த மாதம் இசை வெளியீடும், ஏப்ரல் அல்லது மே மாதம் பட வெளியீடு இருக்கும் எனத் தெரிகிறது.