ஒவ்வொரு மகனுக்கும் அவனுடைய அப்பாவிடமிருந்து கிடைக்கும் பாராட்டுதான் முதல் பாராட்டாக இருக்கும்.
இதற்கு முன் எடுத்த படங்களுக்குக் கூட அப்பாவிடமிருந்து கிடைக்காத பாராட்டு, அப்பா – மகன் உறவைப் பற்றி எடுத்த ‘ஹரிதாஸ் படத்திற்கு கிடைத்ததால் மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன்.
இயக்குனர் ஜி.என். ரங்கராஜனின் மகன்தான் ஜி.என்.ஆர். குமரவேலன். இதற்கு முன் ‘நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களுக்கும் அவருடைய அப்பா குறைகளைத்தான் சுட்டிக் காட்டினாராம்.
ஆனால், இன்று இவரது இயக்கத்தில் வெளிவரும் ‘ஹரிதாஸ்’ படத்தைப் பார்த்ததும் அவருடைய அப்பா நெகிழ்ச்சியடைந்து வாழ்த்தினாராம். அப்பாவின் இந்த வாழ்த்தை விட வேறு எந்த வாழ்த்தும் என்னை உண்மையாக நேசிக்க வைக்குமா எனத் தெரியவில்லை என்கிறார் குமரவேலன்.
தாய்ப்பாசத்தை மிஞ்சிய தந்தைப் பாசம்….