கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா…..

santhanam‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சந்தானம் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கப் போகிறார்.

‘நான் ஈ’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.  ராஜமௌலி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் ‘மரியாத ராமண்ணா.’

இப்படத்தின் ரீமேக்கில்தான் சந்தானம் நாயகனாக நடிக்கப் போகிறார். சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும், முத்திரை படத்தை இயக்கிய ஸ்ரீநாத் இந்த படத்தை  இயக்கப் போகிறார்.

முதலில் இந்த படத்தை சேட்டை படத்தை இயக்கி வரும் கண்ணன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார்.

அநேகமாக சந்தானம் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கப் போவதாகத் தெரிகிறது.

கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா…..

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

மகனைப் பாராட்டிய அப்பா…‘ஹரிதாஸ்’ தந்த ஆனந்தம்