தமிழில் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன், தொடர்ந்து ‘3’ படத்தில் நடித்தார். அதன் பின் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.
தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த ‘கப்பார் சிங்’ சூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வருகிறார்.
தற்போது ரவி தேஜா ஜோடியாக ‘பலுப்பு’ படத்திலும், ராம்சரண் தேஜா ஜோடியாக ‘எவ்வடு’ படத்திலும், ஜுனியர் என்டிஆர் ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
நான்காவதாக ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகப் போகும் ‘பாகுபலி’ படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா இவர்களுடன் ஸ்ருதியும் நடிக்கப் போகிறார்.
ஹிந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் ‘ராமயய்யா ஒஸ்தாவைய்யா’ படத்திலும் மற்றும் ‘டி டே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
ஸ்ருதி தமிழை சுத்தமாக மறந்து விட்டால் போலும்….