தமிழ், தெலுங்கில் இப்போது அனைவராலும் விரும்பப்படும் ஒரே நாயகி சமந்தாதான்.
அழகும், நடிப்பும் ஒரு சேர அமைந்த திறமையான நாயகியாக அவர் இருப்பதே இதற்குக் காரணம்.
தற்போது தெலுங்கில், மூன்று படங்களில் நடித்து வரும் சமந்தா, தமிழில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அடுத்ததாக ஆர்யாவுடன் ஜோடியாக நடிக்க ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கௌதம் மேனனின் உதவியாளரான மகிழ் திருமேனி இயக்கப் போகும் இந்த படத்தில் ஆர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறாராம்.
அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.