அஜித் , நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ நடிக்க விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக துபாயில் நடைபெற்று வந்தது.
அங்கு படத்தின் முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்டன. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள்.
துபாய் படப்பிடிப்பில் அஜித் பல ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். கடந்த சில நாட்களாகவே இணையதளங்களில் அஜித் சம்பந்தமான பல புகைப்படங்கள் உலவி வருகிறது.
விரைவில் படப்பிடிப்பு முடிந்து அநேகமாக மே மாதம் இப்படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.