விஸ்வரூபம் – இப்போது பிரச்சனையைக் கிளப்பும் அமீர்

viswaroopam-image‘விஸ்வரூபம்’ திரைப்படம் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு, தடைகளை சந்தித்து ஒரு வழியாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது புதிதாக இயக்குனர் அமீர் ஒரு பிரச்சனையைக் கிளப்பியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் விஸ்வரூபம் படத்தைப் பற்றிய அவருடைய கருத்தைக் கூறியுள்ளார்.

அதில், “ விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாக சித்தரித்திருக்கிறார்கள்.

எப்படி ஈழத்திற்காகப் போராடிய போராளிகளான பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் தவறாக சித்தரிச்சா என்ன வருமோ அதுதான் விஸ்வரூபம்.

எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும் தீவிரவாதிகள் என்று காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள்.

இப்போதுதான் அது பற்றிய விவாதம் வைத்திருக்க வேண்டும். யாரும் செய்யவில்லை. ஆக, விஸ்வரூபம் படத்தின் மூலம் தன் மண்ணுக்காகப் போராடும் தலிபான் போராளிகளை தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை,” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ’விஸ்வரூபம்’ படத்தின் பிரச்சனையை மீண்டும் கிளறி விட்டிருக்கிறார் இயக்குனர் அமீர் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Read Previous

வசந்த மாளிகை – சிறப்பு கண்ணோட்டம்

Read Next

வருகிறார் ‘கேப்டன் மகன்’

Most Popular