தமிழ்ப் படங்களாக மாறும் ‘டப்பிங் படங்கள்’

geetanjali-telugu-filmமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் சீரியல்களாக உருமாறும் தொடர்களை ஒளிபரப்பக் கூடாதென ஆந்திராவில் பெரும் போராட்டம் வெடித்து, ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தையே தாக்கும் வரை பிரச்சனை சென்றிருக்கிறது.

ஆனால், இங்கோ பல தெலுங்குப் படங்கள் ‘தமிழ்ப் படங்கள்’ போல வெளியிடப்படுவதை யாருமே கேட்பதில்லை.

கற்பூரம் அடிக்காத குறையாக அவர்களது படங்கள் இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படங்கள் என்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளிவந்த சில படங்களைச் சொல்லலாம்.

நமது ரசிகர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. எவை நேரடிப் படங்கள், எவை டப்பிங் படங்கள் என அவர்களே சரியாக கண்டு பிடித்து விடுவார்கள்.

அப்படியே நேரடிப்படம் என்று சொல்பவர்கள் நமது பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்களைப் பின்பற்றி எந்த காட்சிகளையும் வைப்பதில்லை.  உதாரணத்திற்கு , திருமணக் காட்சிகளில் அவர்கள் காட்டும் ‘தாலி’ ஒன்றே போதும், அவர்கள் எந்த அளவிற்கு இரு மொழிகளில் படங்களை எடுக்கிறார்கள் என்பது புரிந்து விடும்.

போதாததற்கு, உடைகள் அணிவது கூட ஆந்திர வழக்கப்படிதான் இருக்கும்.

முன்பெல்லாம் தெலுங்கு டப்பிங் படங்கள் என்று சொல்லி வெளியாகிய பல படங்கள் தமிழ்ப் படங்களை விட நன்றாகவே ஓடியிருக்கின்றன.

அப்படியிருக்க, இப்போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள், இதற்கு இங்கிருப்பவர்களும் உடந்தையாக இருக்கிறார்கள்.

இப்போதே , டப்பிங் சீரியல்கள் தொடர்பாக பிரச்சனைகள் ஆரம்பமாகி விட்டது, ஆந்திர தேசத்தில்…

நம்மவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் ?…..

Read Previous

நயன்தாராவின் ‘ஆறு விரல்’ அதிர்ஷ்டம் !

Read Next

திரும்பி வந்தார்…அஞ்சலி….

Most Popular