நடிகர் விக்னேஷ் நடித்து ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. அவரது திறமையை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்ட சில படங்கள் வெளியாகி இருந்தாலும் இன்னமும் நட்சத்திர நடிகராக வலம் வராமல் தவித்துக கொண்டிருக்கிறார்.அவரது திறமையை முழு வெளிச்சம் போட்டுக் காட்ட ’பூனை’ என்ற படம் தயாராகிறது. பூனை (புலியாக மாறிய கதை) படத்தின் ஒவ்வொரு காட்சியுமே தன்னைக் கலை உலகில் நிலை நிறுத்தும் படமாக அமையும் என்று நம்புகிறார் விக்னேஷ்.
பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்ற ஜாம்பவான்களால் பட்டை தீட்டப்பட்டுள்ள விக்னேஷ் , இந்த படத்தின் மூலம் எழுச்சி பெறுவார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று உறுதியுடன் கூறுகிறார் படத்தின் இயக்குனரான ராம் கிருஷ் மிர்ணாலி.
இப்படத்திற்காக விக்னேஷ் தன்னை தயார் செய்து கொண்டு வருகிறார்.