‘சிங்கம் 2’ விழாவில் கலந்து கொண்ட அனுஷ்கா

surya-and-anushkaசூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் ‘சிங்கம் 2’ படத்தின் இசை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படங்களின் ஹீரோயின்களில் ஒருவரான ஹன்சிகா மட்டுமே கலந்து கொண்டார். ஆனால், அனுஷ்கா கலந்து கொள்ளவில்லை.

இதைப் பற்றி ஒரு சில இணையதளங்களில் (நமது இணையதளத்தில் அல்ல) அனுஷ்கா, சென்னையில் நடைபெற்ற ‘சிங்கம் 2’ இசை வெளியீட்டு விழாவை தவிர்த்து விட்டதாகவும், படத்தில் அவருக்கிருந்த முக்கியத்துவத்தை குறைத்துவிட்டதால்தான்  இந்த முடிவை எடுத்தார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

இந்த பொய்யான செய்திகளுக்கு அனுஷ்கா முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.

நேற்று ஆந்திராவில் நடைபெற்ற ‘சிங்கம் 2’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அனுஷ்கா , சூர்யாவுடன் கலந்து கொண்டார்.

அனுஷ்கா தற்போது, ‘பாகுபலி, ராணி ருத்ரம்மா’ என்ற இரண்டு பிரம்மாண்டமான சரித்திரப் படங்களில் நடித்து வருவதாலேயே சென்னை விழாவுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதற்குள் பொய்யான செய்திகளை சிலர் வெளியிட்டுவிட்டனர்.

Read Previous

‘காவியத் தலைவன்’ நட்சத்திரங்கள்…

Read Next

சூர்யா அற்புதமான நடிகர் – அனுஷ்கா

Most Popular