‘மரியான்’ டப்பிங் பிரச்சனை…

dhanush-and-ar-rahman‘மரியான்’ திரைப்படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ, பிரச்சனை மேல் பிரச்சனையாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த படம் ஆரம்பித்து படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. அதன் பின் குறிப்பிட்ட தேதியில் வெளிவராமல் தள்ளிக் கொண்டே போனது. இடையில் சென்சார் பிரச்சனை வேறு ஏற்பட்டு, ஒரு வழியாக படம் கடந்த வாரம் வெளியாகியது.

சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் ரைட்ஸ் சம்பந்தமாக ஒரு பிரச்சனை எழுந்து அடங்கியுள்ளது.

இப்படத்தை ஹிந்தியில் வெளியிட நல்ல விலை வந்ததாம். ஆனால், தமிழுக்காக போட்ட ஒப்பந்தத்தில் இப்படத்தை டப்பிங் செய்யும் வாய்ப்பு வந்தால், தனுஷ், ஏ.ஆர். ரகுமான் ஆகியோரின் சம்மதத்துடன்தான் செய்ய முடியும் என்று இருந்ததாம்.

இதனால், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், தனுஷ், ரகுமான் இருவரிடமும் பேசியிருக்கிறார். இருவருமே டப்பிங் செய்து வெளியிட வேண்டும் என்றால் அவர்களுக்கு தனித் தனியே இரண்டு கோடி கொடுத்தால்தான் சம்மதிப்போம் என்றார்களாம்.

இதனால், கடுப்பாகிப் போன தயாரிப்பாளர் ஹிந்திக்கு விற்பதையே நிறுத்திவிட்டாராம். இந்த படத்தினால் எவ்வளவோ கோடி போயிற்று. அதோடு இதுவும் போகட்டும் என்று விட்டுவிட்டாராம்.

படங்களை வெளியிடுவதில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் செய்யும் விளம்பரம் திரையுலகம் அறிந்த ஒன்ற. பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யும் அவர் இந்த படத்திற்காக செய்த விளம்பரம் மிக மிகக் குறைவு. அவர் ஏன் இவ்வளவு குறைவாக செய்தார் என்பது இப்போதுதான் பலருக்குப் புரிகிறதாம்.

தயாரிப்பாளர்களை முதலாளிகளாகப் பார்த்ததெல்லாம் அந்தக் காலம்…

Read Previous

‘பிரியாணி’ சமைச்சாச்சி…

Read Next

தமன்னாவுக்கு பதில் ஸ்ருதிஹாசன்…

Most Popular