கார்த்தி – இயக்குனர் ஹரி இருவரும் இணைவதாக இருந்த படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.
கார்த்தி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பிரியாணி’ படத்தில் நடித்து வருகிறார். ராஜேஷ் இயக்கத்தில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்குப் பிறகு ஹரி இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.
கார்த்தி அடுத்து ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்திலும், கண்ணன் இயக்கத்திலும் நடிப்பார் என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.