“என்னது…தலைவா ரிலீஸ் ஆகுதா…” இதுதான் இப்போது பொதுமக்களில் பலர் கேட்கும் கேள்வி.
பல குளறுபடிகளுக்குப் பிறகு தலைவா படம் 20ம் தேதி ரிலீஸ் ஆகப் போவதாக பத்திரிகை விளம்பரங்களை மட்டுமே பார்த்து தெரிந்த கொள்ள வேண்டிய நிலையில்தான் பலர் இருக்கின்றனர்.
அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இன்றைய தேதியில் படம் வெளியாகப் போகிறது என்று எந்தவிதமான முறையான அறிவிப்பும் வரவில்லை.
அதிலும் கூட, படத்திற்கான ரிசர்வேஷன் எப்போது ஆரம்பிக்கப் போகிறது என்பதும் குழப்பமாகவே உள்ளது. விளம்பரங்களில் இன்று முதல் ரிசர்வேஷன் என்று உள்ளது. ஆனால், பத்திரிகை செய்திகளில் நேற்று முதலே ரிசர்வேஷன் ஆரம்பமாகிவிட்டது என்று செய்தி வெளியாகி உள்ளது.
திரையரங்கு வட்டாரங்களில் நாம் விசாரித்த வரையில் , வழக்கமான பரபரப்போ , ஆர்பாட்டமோ இந்த படத்திற்கு தற்போது இல்லை என்றே தெரிகிறது.
‘தலைவா’ படத்தின் தாமதமான வெளியீடு நடிகர் விஜய்யின் எதிர்கால திரையுலக வாழ்க்கைக்கு மிகப் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.