கார்த்தி நடித்து வரும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி’ ஆகிய படங்களின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை 23 கோடி ரூபாய்க்கு சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திரைப்படங்களும் முறையே 11.5 கோடிக்கு சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளதாக அப்படங்களின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ‘தலைவா’ படத்தை சன் டிவி 15 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகவும், அஜித் நடித்து வரும் ‘வீரம்’ திரைப்படத்தை 13 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும், சூர்யாவின் அடுத்த படத்தை 15 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதோடு விட்டால் பரவாயில்லை. அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் விதத்தில் இன்னொரு தகவலையும் சொல்லியுள்ளார்.
“அழகுராஜா, பிரியாணி படங்களின் சாட்டிலைட் உரிமை, அஜித், விஜய், சூர்யா படங்களை நெருங்கியிருக்கிறது. 8 படங்களிலேயே கார்த்தியின் இந்த சாதனை அவர் எந்த இடத்தை நெருங்குகிறார் என்பதை தெளிவாகச் சொல்கிறது”, என்றும் கூறியிருக்கிறார்.