மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் – பிரியாமணியின் ஆசை

priyamani 0808_00020தமிழில் ‘பருத்தி வீரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றாலும், தொடர்ந்து இங்கு நல்ல படங்கள் கிடைக்காமல் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் பிரியாமணி.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது,

“எனக்கு மேக்கப் இல்லாமல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது ஆசை.  அது மட்டுமல்ல நான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாட வேண்டும் என்றும் ஆசை உண்டு.

எனக்கு வரும் கணவர் எந்த தடுமாற்றமும் இல்லாமல் தைரியமாக பேசக் கூடியவராக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலைக்கேற்றவாறும் மாற்றிக் கொள்ளும் திறமையுடவராகவும் இருக்க வேண்டும்.

நான் முதன் முதலில் சம்பாதித்த 500 ரூபாயை பொக்கிஷமாக நினைத்து பாதுகாத்து வருகிறேன், ” என்றும் கூறியிருக்கிறார் பிரியாமணி.

 

Read Previous

23 கோடிக்கு விற்ற கார்த்தி படங்கள்…

Read Next

ரஜினிகாந்தை சந்திக்கிறாரா மோடி ?