ரஜினிகாந்தை சந்திக்கிறாரா மோடி ?

superstar rajinikanthபாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரஜினிகாந்த், பாரதீய ஜனதா காட்சியை ஆதரிக்க வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா வேண்டுகோளும் விடுத்தது.

இதனிடையே, வரும் 26ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பேரணி ஒன்றில் பேச வரும் நரேந்திர மோடி, ரஜினிகாந்தை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்திலும் தெலுங்கத் திரையுலகைச் சேர்ந்த பலரை மோடி ஏற்கெனவே சந்தித்து பேசி அவருக்கான ஆதரவைப் பெறும் முயற்சியில்  இறங்கி விட்டார்.

தென்னிந்தியாவில் நடிகர்களின் ஆதரவு என்பது மிக முக்கியம் என உணர்ந்துதான் மோடி இப்படி செயல்படுகிறார் என சொல்லப்படுகிறது.

எது எப்படியோ ….மோடி,  ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினால், தமிழக அரசியல் களம் மட்டுமல்ல, இந்திய அரசியல் களமும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் – பிரியாமணியின் ஆசை

Read Next

200 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’