200 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’

chennai-expressஷாரூக் கான், தீபிகா படுகோனே, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் இதுவரை சுமார் 225 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாம்.

முதல் நாளில்  மட்டும் சுமார் 33 கோடி ரூபாய் வசூல் செய்து, முதல் வாரக் கடைசியிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

முதல் வார முடிவில் 156 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம், இதுவரை சுமார் 225 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் வழக்கமாக இந்தித் திரைப்படங்களுக்கு வசூலாகும் தொகையை விட 80 சதவீதம் அதிகமாக வசூலாகியுள்ளதாம்.

ஷாரூக்கானின் அட்டகாசமான நடிப்பு, தீபிகா படுகோனேவின் அழகான தோற்றம், ரோஹித் ஷெட்டியின் கலகலப்பான இயக்கம் இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்து பல சாதனைகளை புரிய வைத்துள்ளது.

Read Previous

ரஜினிகாந்தை சந்திக்கிறாரா மோடி ?

Read Next

ஸ்ரீதேவி நடிக்கும் மும்மொழிப் படம்…

Most Popular