ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம்…

nambiar_00001‘நண்பன்’ படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். ‘ஓம்சாந்தி ஓம், நம்பியார்’ என தன்னை தூக்கிக் கொண்டு ஓடும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நம்பியாரில் சந்தானம் உடன் பயணிக்கும் மிகப் பெரிய நம்பிக்கை. சீனுக்கு சீன் காமடி  களைகட்ட வைத்துள்ளனர் சந்தானம்-ஸ்ரீ ஜோடி . யூனிட்டே அதிர்ந்து சிரிக்கும் அளவிற்கு காட்சிகளை வடிவமைத்துள்ளார் புதுமுக இயக்குனர் கணேஷா.
கோல்டன் ஃப்ரைடே பில்ம்ஸ் தயாரிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சுனைனா இதுவரை  கிராமத்துப்   பெண்ணாகவே  நடித்துள்ளார். இதில் அழகு மிளிரும் நகரத்துப் பெண்ணாக வலம்  வருகிறார். விஜய் ஆண்டனி இசை எம். எஸ். பிரபுவின் ஒளிப்பதிவு என பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது நம்பியார்.
‘நம்பியார்’ படத்திற்கு அடுத்து என்ன? என்ற கேள்விக்கு விடையாக தெலுங்கில்  சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘சுவாமி ரா ரா’ வை தமிழுக்கு தூக்கி வருகிறார்.
சுதீர் வர்மா இயக்கிய க்ரைம்  சப்ஜெக்டான ‘சுவாமி ரா ரா’ வெகு விரைவில் தமிழ் பேச இருக்கிறது.

Read Previous

எந்த கேரக்டரிலும் நடிக்க ரெடி – பரத் ரெட்டி

Read Next

‘பாண்டிய நாடு’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்…