தெலுங்கில் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள டாக்டர் பரத் ரெட்டி தமிழில் கமலஹாசன் நடித்த “உன்னைப்போல் ஒருவன்” படத்தின் மூலம் அறிமுகமாகி பிரகாஷ்ராஜுடன் பயணம் மற்றும் மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் தற்பொழுது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “ரகளபுரம்” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
மற்றும் சுந்தரபாண்டியன் இயக்குனர் பிரபாகரன் இயக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் ஸ்டன்ட் மாஸ்டர் கனல்கண்ணன் தயாரிப்பில் ஒரு படம் மற்றும் சேட்டை இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒருபடத்திலும் நடிக்க இருக்கிறார்.
பரத் ரெட்டி நடிப்பதற்காக எட்டு மொழிகளை கற்றிருக்கிறார். மற்றும் கிக்பாக்சிங், சண்டை பயிற்சி போன்றவைகளையும் கற்று கொண்டுதான் நடிக்க வந்தேன் என்கிறார்.
ரகளபுரம், இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து தமிழில் முன்னி இயக்குனர்கள் இயக்கவிருக்கும் படங்களிளும் நடிக்க இருக்கிறார்.
நிறைய இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் என்னை தங்கள் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க அழைக்கின்றனர். நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க போவதாக கூறுகிறார். நான் போலீஸ் வேடத்திலும் நடிப்பேன் மற்றும் காமெடியான வேடதில் நடிக்க ஆசை என்கிறார் பரத் ரெட்டி.
டாக்டர் பரத் ரெட்டி அப்பலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.