“வேட்டை மன்னன்’, வாலு”, படங்களில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடி சேர்ந்து நடித்த போது இருவருக்கும் காதல் பற்றிக் கொள்ள, அது தொடர்பாக வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இருவருமே காதலிப்பதாக அறிவித்தனர்.
ஆனால், அதைத் தொடர்ந்து பல மாற்றங்கள் நடந்து இப்போது சிம்பு – ஹன்சிகா இருவரும் பிரிய நேரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹன்சிகாவின் காதலால் முதலில் நொந்து போனவர் அவருடைய அம்மாதான். அவர்தான் இவர்கள் காதலுக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார் என்கிறார்கள்.
முதலில் ஹன்சிகாவைப் பற்றிய தகவல்களை சிம்புவுக்கு தெரிவிக்கிறார் என சந்தேகப்பட்டு ஹன்சிகாவின் மேனேஜரை நீக்கி விட்டு, ஹன்சிகாவின் அம்மாவே அனைத்தையும் பார்க்கத் துவங்கி விட்டார்.
இதனிடையே , ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிக்கும் ஆன்ட்ரியாவுடன் சிம்பு நெருக்கமாகி விட்டார் என்கிறார்கள்.
எப்படியோ சிம்புவையும், கிசுகிசுவையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது…