சமீபத்தில் ஆரம்பமான ஒரு தொலைக்காட்சியின் துவக்க விழாவில் இயக்குனர் மிஷ்கின், டிவி சீரியல்களைப் பற்றியும், டிவி நடிகர்களைப் பற்றியும் கமென்ட் அடித்ததாகத் தெரிகிறது.
அதைப் பற்றிக் கேள்விப்பட்ட ‘திருமதி தமிழ்’ படத்தின் இயக்குனரும் நடிகர் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன், இயக்குனர் மிஷ்கினை ‘டைரக்டர் மன்சூர் அலிகான்’ என கிண்டலடித்திருக்கிறார்.
தேவையில்லாமல் தனது பெயரை ராஜகுமாரன் இழுத்திருப்பதை அறிந்து மன்சூரலிகான் அவரது பாணியிலேயே ராஜகுமாரனுக்கு பதிலளித்திருக்கிறார்.
“மிஷ்கின் ரொம்ப நல்ல டைரக்டர். தேவயானி கூட நான் ‘மறுமலர்ச்சி’ படத்துல இருந்து எத்தனையோ படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கேன். அற்புதமான நடிகை அவங்க.
அப்படிப்பட்டவங்களையே கேட் ஏறி ஓடி வர வச்சவர் ராஜகுமாரன். மூணு படம் டைரக்ட் பண்ணாரு. அப்படியே அந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
வீட்ல இப்ப நல்லா சேவகம் பண்ணிட்டிருக்காருன்னு கேள்விப்பட்டேன். அது சரியா போயிட்டிருக்கா, லிப்ஸ்டிக் போடுறாரே, அது அளவா இருக்கான்னு பார்த்துட்டு போகலாம்.
இருந்தாலும் அந்த ஆளை எனக்கு ஒரு விஷயத்துல ரொம்ப பிடிக்குது. இன்டஸ்ட்ரியை வாழ வைக்கணும், நாலு பேருக்கு வேலை கொடுக்கணும்னு நினைச்சி கைக்காசை எடுத்து விடறத பாராட்டலாம்.
கைக்காசு அவரு பையில இருந்து வருதா, இல்ல வீட்டம்மா பர்ஸ்ல இருந்து வருதாங்கிறதா முக்கியம், என பதிலடி கொடுத்திருக்கிறார்.