‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ படங்களைத் தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் அடுத்து ஆர்யா, விஜய் சேதுபதி வைத்து இயக்கும் படத்திற்கு ‘புறம்போக்கு’ என தலைப்பை வைத்தார்.
ஆனால், அது தன்னுடைய தலைப்பு என பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் சுப்பிரமணியம் தெரிவித்தார். இதனால், அந்த தலைப்பை தனது படத்திற்கு வைக்கப் போவதில்லை எனவும் இயக்குனர் ஜனநாதன் தெரிவித்திருந்தார்.
ஆனால், இப்போது அந்த தலைப்பை தங்களுக்கே கிடைத்து விட்டதாக ஜனநாதன் தெரிவித்துள்ளார்.
“அந்த தலைப்பை முதலில் பதிவு செய்தவர்கள் என்ற விதத்தில் எங்களுக்கே கிடைத்து விட்டது. அதோடு, நட்ராஜ் சுப்பிரமணியத்திடமும் இது பற்றி பேசியாகிவிட்டது, ” என்று தெரிவித்துள்ளார்.