15 புது கலைஞர்களுடன் ‘இல்ல ஆனாலும் இருக்கு’

illa aanalum irukku_00001“விண்ணை தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன் வசந்தம் ,”  ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தற்போது ரவி. கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக துளசி நடிக்கும் ‘ யான்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.தலைப்பில் மட்டுமின்றி  படத்தின் தரத்திலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு  ‘ இல்ல ஆனாலும் இருக்கு’ .

நகைச்சுவை கலந்த திகில் படமான ‘இல்ல ஆனாலும் இருக்கு’ திரைப்படத்தில் 15 புதிய தொழில் நுட்பக் கலைஞர்கள் அறிமுகமாக உள்ளனர்

“ஒரே படத்தில் இவ்வளவு கலைஞர்களைஅறிமுகப்படுத்துவது   மிகவும் பெருமைக்குரியது . இவர்கள் எல்லோருமே நிச்சயமாக  திரை உலகில்  பிரகாசமாக ஒளி வீசுவர்.

உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் என்ற ஊரில் படமாக்கப்படும் இந்த படத்தின் கதைக்கு , அந்த ஊரின் பின்னணி மிகவும் பலம் சேர்க்கக் கூடும். இடை விடாமல் 50  நாட்களுக்கு மேல் படமாக்க பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு  20 நாட்கள் முடிவடைந்து உள்ளது.

தெளிவான  திட்டமிடுதல் மற்றும்  நேர்த்தியான இயக்கம் மூலம் ஒரு அனுபவசாலியான இயக்குனர் போல்  இயங்கும் டீகே,  இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களிடம் பணி புரிந்தவர்.

இந்த படம்  எங்களது   தயாரிப்பு நிறுவனத்தின் மிக முக்கிய படமாக திகழும்’’  என தயாரிப்பாளர்கள்  எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம்  தெரிவித்துள்ளனர்.

Read Previous

சிம்பு – ஹன்சிகா பிரிவு…?

Read Next

ஒரு படத்தின் வெற்றிக்கு யார் காரணம் – விழாவில் பரபரப்பான மோதல்

Most Popular