ஒரு படத்தின் வெற்றிக்கு யார் காரணம் – விழாவில் பரபரப்பான மோதல்

director-vikramanபல வெற்றிப் படங்களைக் கொடுத்த மதர்லேன்ட் பிக்சர்ஸ், வேந்தர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ‘உயிருக்கு உயிராக’ படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.

விழாவில் பேசிய இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவருமான விக்ரமன், “ஒரு படம் வெற்றி பெற்றால் பலரும் அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள். அதுவே , ஒரு படம் தோல்வியடைந்து விட்டால், இயக்குனர் மீது குறை சொல்லிவிட்டு அனைவரும் ஒதுங்கி விடுகிறார்கள்.

பின்னாளில், அந்த படத்தைப் பற்றி கொஞ்சம் கூடப் பேசுவது இல்லை. ஏதோ, தெரியாமல் அந்த படத்தில் நடித்து விட்டேன் என்ற ரீதியிலேயே பேசுவார்கள்.

இயக்குனர்களுக்கு ஒவ்வொரு படமுமே வாழ்க்கைப் போராட்டம்தான். அனைத்து விஷயங்களையும் அவர்களே பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியுள்ளது.

படத்தின் பட்ஜெட் அதிகாமானால் கூட, இயக்குனரை குறை சொல்கிறார்கள். ஆனால், நடிக்க வருபவர்கள் 8 மணிக்கு வரச் கெசான்னால் 12 மணிக்கு வந்தால், திட்டமிட்ட காட்சிகளை எடுக்க முடியாமல் தவித்துப் போவது இயக்குனர்களே. தயாரிப்பாளரோ, அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க.

இதனாலெல்லாம் படத்தின் பட்ஜெட் அதிகமாவதை அவர்கள் கணக்கு போடுவதேயில்லை, ” என்று காட்டமாகவே பேசினார்.

அடுத்து பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் , இந்த விஷயத்தைப் பற்றி அவ்வளவாகப் பேசாமல் போய் விட, பின்னர் பேசிய ராதாரவி விக்ரமன் பேச்சுக்கு பதிலளித்தார்.

“இங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் எல்லோரும் சேர்ந்துதான் பணியாற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் யார் பெரியவர் என்று பார்க்கக் கூடாது.

இங்கு ரசிகர் மன்றங்கள் நடிகர்களுக்குத்தான் வைக்கப்படுகின்றன. எந்த இயக்குனருக்கும் வைக்கப்படுவதில்லை.

படம் வெற்றி பெற்றால் நடிகர்கள் நாங்கள்தான் பெயரை தேடிக் கொள்வோம். அதே சமயம்,  படம் தோல்வியடைந்தால் இயக்குனர் மீது பழியைப் போட்டு விடுவோம், ” என்றார்.

எல்லாம் சரி, ஒரு படத்தோட வெற்றிக்குக் காரணம் அந்த படத்தைப் பார்க்க வர்ற ரசிகர்கள்தான்ங்கறத யாருமே பேசலையே ஏன் ?…..

Read Previous

15 புது கலைஞர்களுடன் ‘இல்ல ஆனாலும் இருக்கு’

Read Next

அறிமுக இயக்குனரின் ‘ஆந்திரா மெஸ்’