ரசிகர்களை கவரும் வண்ணம் தலைப்பு சூட்டி உள்ள படங்கள் உடனே பிரபலமாக ஆவது வித்தியாசமான தலைப்புகளை புதிய இயக்குனர்களை யோசிக்க வைக்கிறது.
தலைப்பில் என்ன இருக்கிறது என்ற காலம் போய் தலைப்பில் தான் எல்லாமே இருக்கிறது என்கிற காலம் இது போலும் .
ஷோ போட் ஸ்டூடியோஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் படத்தின் தலைப்பு ‘ ஆந்திரா மெஸ்’ .
சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர் , சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது . அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மன மில்லாமல் , யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்க்கைப் பயணமே ‘ ஆந்திரா மெஸ்’.
‘ஷைத்தான்’ பட இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த படத்தை ஜெய் இயக்குகிறார்.