அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ நடித்து அக்டோபர் 31ம் தேதியன்று வெளியான ‘ஆரம்பம்’ திரைப்படம் 14 நாட்களில் மட்டும் 132 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஆரம்பம்’ திரைப்படத்தை பல வெளிநாடுகளில் வெளியிட்டுள்ள அய்ங்கரன் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
‘ஆரம்பம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடியாகவும், இரண்டாம் நாள் வசூல் 11 கோடியாகவும், மூன்றாம் நாள் வசூல் 10 கோடியாகவும் இருந்துள்ளது.
தொடர்ந்து சராசரியாக தினமும் 9 கோடி ரூபாய் அளவிற்கு இந்த படம் வசூலைக் குவித்து வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு வந்த படங்களிலேயே ‘ஆரம்பம்’ படம்தான் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் ஓபனிங் கலெக்ஷன் , பாக்ஸ் ஆபீஸில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.