உலகளவில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு எப்போதுமே உண்டு.
ஆக்ஷன் ஹீரோக்களாக உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரிசையில் புருஸ்லி, ஜாக்கிசான், அதன் பிறகு டோனிஜா, அடங்குவர்.
டோனிஜா ஏற்கனவே நடித்து சூப்பர் ஹிட் ஆன “ஓங் பேக் 1“ என்ற படம் உலக அளவில் மாபெரும் வசூல் புரட்சியை ஏற்படுத்தியது.
தற்போது பத்து வருடங்களுக்குப் பிறகு “ஓங் பேக் 1”படத்தில் இணைந்த இயக்குனர்
‘ஓங் பேக்’ எப்படி ஆக்ஷன் படமாக பேசப் பட்டதோ அதற்கு இணையாக “கும்கி வீரன்” (Tom Yum Goong 2 ) என்ற படமும் ஆக்ஷன் விஷயத்தில் பரபரப்பாகப் பேசப் படும்.
20 நிமிடம் ஓடும் பைக் சேசிங் ஷாட்ஸ் ஒன்றை படமாக்கிய விதத்தைப் பார்த்து அனைவரும் மிரண்டு போவார்கள்.
IMDB என்ற அமைப்பு இந்த படத்திற்கு 7.3 என்று ரேட்டிங் கொடுத்திருக்கிறது
இப்படத்தின் வசனத்தை ராஜா எழுதுகிறார்.
இண்டோ ஓவர்சிஸ் நிறுவனம் சார்பாக பிரோஸ் மற்றும் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஜி.ஆர்.ஆர்.ரகு, சிவன், செந்தில் இருவரும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.
இவர்கள் ஏற்கனவே ஜாக்கிசான் நடித்த ‘CZ 12’ என்ற ஆக்ஷன் படத்தை வெளியிட்டவர்கள்.
இம் மாதக் கடைசியில் இப்படம் வெளிவர இருக்கிறது.