‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
விஜய் தற்போது ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் ‘துப்பாக்கி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
அநேகமாக, ஹிந்திப் பட வேலைகள் முடிவடைந்ததும், விஜய் நடிக்கும் புதிய படத்தின் வேலையை முருகதாஸ் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.
மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
‘துப்பாக்கி’ படம் 100 கோடி வசூல் என்று சிலர் சொல்லி வரும் நிலையில் அப்படத்தின் வசூல 50 கோடிக்கும் சற்று அதிகமாகத்தான் வசூலானது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலைத் தொட்ட ஒரே படம் ‘எந்திரன்’ மட்டுமே.
இந்த முறையாவது 100 கோடியைத் தொட்டுடுங்க பாஸ்…