திருக்குறளுக்கு இசையமைத்துள்ள பரத்வாஜ்…

music director bharadwajஅஜித் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளரானவர் பரத்வாஜ்.

தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தவர், சமீப காலமாக எந்த படத்திற்கும் இசையமைக்காமல் இருந்தார்.

விசாரித்தால், திருக்குறளுக்கு இசை வடிவம் கொடுத்தி ருக்கிறாராம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அதிதி’ என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அப்படத்தின் பாடல் கம்போசிங்கில் அவரைச் சந்தித்து ‘திருக்குறள் – இசை வடிவம்’ பற்றிக் கேட்டோம்.

“அறத்துப்பால் – பொருட்பால் – காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளை மூன்று  விதங்களில் இசையமைத்து இருக்கிறேன்.

அறத்துப்பால் இசை ஒரு மாதிரி !  பொருட்பால் இசை இன்னொரு மாதிரி! காமத்துப்பால் இசை இன்னொரு மாதிரி என்று வேறு படுத்தி இருக்கிறேன்.

இதற்காக உலகம் முழுக்க உள்ள எல்லா நாட்டு தமிழ் பாடகர்களையும் பாட வைத்திருக்கிறேன். இங்கே நமக்கு பரிச்சயமான எல்லா பாடகர்களும் பாடி இருக்கிறார்கள். மொத்தம் 500 பாடகர்கள் பாடி இருகிறார்கள்.

எந்த தலை முறையினருக்கும் திருக்குறள் தேவைப்படுகிற ஒன்று.

வார்த்தையால் சொல்வதை இசை மூலம் எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டேன். இதற்காக 12 நாடுகளுக்கு சென்று பாடகர்களை பாட வைத்தேன்.

ஜனவரி  17ஆம் தேதி அன்று திருவள்ளுவர் தினம். அன்று இதை வெளியிட இருக்கிறேன்,” என்கிறார்  பரத்வாஜ்.

நல்ல முயற்சி, வாழ்த்துகள்…

Read Previous

தமிழில் ரீமேக் ஆகும் மலையாள ‘காக்டெயில்’…

Read Next

விஜய் படம் இயக்குகிறேன் – ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி