தமிழில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ‘ஆரம்பம்’ திரைப்படம் தெலுங்கில் ‘ஆட ஆரம்பம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
இம்மாதக் கடைசியில் இப்டம் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக இசை வெளியீடு அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
பிரியாமணி, சரத்குமார் நடித்த ‘சண்டி’ தெலுங்குப் படத்தைத் தயாரித்த ஜி. ஸ்ரீனிபாபு, இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார்.
ரானா டகுபதி, நயன்தாரா, டாப்ஸீ ஆகியோர் தெலுங்கில் பிரபலமானவர்கள் என்பதால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்யாவும் 2010ம் ஆண்டு ‘வருது’ என்ற தெலுங்குப் படத்தில் வில்லனாக நடித்து, தெலுங்கு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான். விஷ்ணுவர்தனும் பவன் கல்யாண் நடித்த ‘பாஞ்சா’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கியவர்.
‘ஆரம்பம்’ ஹிந்தியிலும் ரீமேக்காக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.