தனுஷ் ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள்…

akshara hassanகமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா,  தனுஷ் ஜோடியாக ஹிந்திப் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமிதாப் பச்சன் நடித்த “சீனி கம், பா போன்ற தரமான படங்களை இயக்கிய பால்கி அடுத்த இயக்கப் போகும் புதிய படத்தில் தனுஷ்  நடிக்க உள்ளார். ‘ராஞ்சனா’ என்ற ஹிந்திப் படம் தனுஷுக்கு பாலிவுட்டிலும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா அறிமுகமாக உள்ளாராம். கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையரில் ஒருவராக உள்ளார்.

இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார்.

பால்கியின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பமாக உள்ள இப்படம், வருடக் கடைசியில் வெளியாக உள்ளதாம்.

மற்ற விவரங்கள், விரைவில்…

Read Previous

தப்பா எழுதக் கூடாதுன்னு ‘தகராறு’ பேர் வச்சோம் – அருள்நிதி

Read Next

‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுவாரா ஆர்யா ?