சீனு ராமசாமி கதையை இயக்கும் பாரதிராஜா ?

director bharathiraja“தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை” ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமியின் கதையை தனது அடுத்த படத்திற்காக பாரதிராஜா இயக்குவார் எனத் தெரிகிறது.

சமீபத்தில் பாராதிராஜாவைச் சந்தித்த போது, அவரிடம் கதை ஒன்றை சொன்னாராம் சீனு ராமசாமி. அந்த கதை பாரதிராஜாவுக்குப் பிடித்துப் போக முழு ஸ்கிரிப்ட்டுடன் வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கம் போல பாரதிராஜாவுக்குப் பிடித்தமான தேனி நகரைச் சுற்றிய கதையாம். கிராமத்துப் பின்னணியில் ஒரு த்ரில்லராக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சீனு.

பாரதிராஜா தயாரிக்க சீனு ராமசாமியையே இந்த கதையை இயக்குமாறு பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், பாரதிராஜாதான் இந்த கதையை இயக்க வேண்டுமென தன்னுடைய ஆவலையும் வெளிப்படுத்தியிருக்கிறார் சீனு. ஸ்கிரிப்ட் முழுமையாக தயாரானவுடன் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

‘அன்னக்கொடி’யால் துவண்டு போன பாரதிராஜாவுக்கு அடுத்த வெற்றி நிச்சயம்.

Read Previous

அமிதாப்ஜியுடன் நடிப்பது பாக்கியம் – தனுஷ்

Read Next

‘பாண்டிய நாடு’ – இயக்குனர் சுசீந்திரன் ‘சுட்ட கதை’…?