அமிதாப்ஜியுடன் நடிப்பது பாக்கியம் – தனுஷ்

dhanush“சீனிகம், பா” படங்களுக்குப் பிறகு பால்கி இயக்கப் போகும் புதிய ஹிந்திப் படத்தில் அமிதாப் பச்சனுடன், தனுஷ் நடிக்கப் போகிறார் என நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அது குறித்து இன்று தனுஷ் அவருடைய மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கிறார்.

“பிக் பி-யுடன் நடிப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். அதுவும் இளையராஜா சார் இசையில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஒளிப்பதிவாளர் பி.சி-யுடன் பணிபுரியவும் ஒரு வாய்ப்பு,” என அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“ராஞ்ஜனா” என்ற மாபெரும் வெற்றிப் படத்தில் நடித்ததற்குப் பிறகு தனுஷ் நடிக்கப் போகும் ஹிந்திப் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வேறு எந்த இளம் நடிகருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்துள்ளது.

Read Previous

ஃபேஸ்புக்கில் 1 லட்சம் ரசிகர்கள் – இனியா மகிழ்ச்சி…

Read Next

சீனு ராமசாமி கதையை இயக்கும் பாரதிராஜா ?

Most Popular