ஃபேஸ்புக், ட்விட்டர் – நடிக, நடிகையர்களுக்குப் பிரச்சனையா…?

facebook-and-twitterசில வருடங்களுக்கு முன்னால், நடிக, நடிகையரின் ரசிகர்கள் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளும் நிலை மட்டுமே இருந்தது.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், அவர்களே கூட போனை எடுத்து வேலைக்காரர்கள் போல் பேசி ரசிகர்களிடம் பேசாமல் தவிர்த்ததும் உண்டு.

ஆனால், ஃபேஸ்புக், ட்விட்டர் வந்த பிறகு நடிக, நடிகையர் ஒரு மாயவலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாகவே நமக்குத் தோன்றுகிறது.

மரியாதையான ரசிகர்கள் என்றால் பரவாயில்லை, ஆனால், வேண்டுமென்றே சிலர் பிரச்சனை செய்யும் போது, அவர்களால் அதைத் தடுக்க முடியாமல் கடைசியில் சண்டை, சச்சரவுகளில்தான் அது போய் முடிகிறது.

இது சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது.

ஆனாலும், யாரும் அவற்றை விட்டு தற்போதைக்கு வெளியில் வருவது போல் தோன்றவில்லை. ஏனென்றால், நம்மைத் தொடரும் “ஃபாலோயர்கள்” எத்தனை பேர் என்பதில் ஒருவருக்கொருவர் போட்டியே நிலவுகிறது.

இவற்றில் நடிகர்களை விடசில நடிகைகளுக்குத்தான் அமோக வரவேற்பு. அவர்களுக்குத்தான் லட்சக்கணக்கில் “ஃபாலோயர்கள்” இருக்கிறார்கள்.

எந்த படப்பிடிப்பில் இருந்தாலும், ஏதாவது விழாவில் இருந்தாலும் உடனுக்குடன் அவற்றைப் புகைப்படம் எடுத்து அவர்களது “பேஸ்புக், ட்விட்டர்’’ ஆகியவற்றில் வெளியிட்டு விடுகிறார்கள்.

இதனால், அவர்களது தனிமை பாதிக்கப்படுவதுடன்,  தேவையற்ற சில பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் நடிக, நடிகையர் எங்கே போகிறார்கள், வருகிறார்கள் என்பது ரகசியமாகவே இருந்தது. இப்போது, அந்த ரகசியத் தன்மை குறைந்து விட்டது.

வெளியூருக்குச் சென்றால், விமான நிலையத்திலேயே கூட யாரோ ஒரு ரசிகர் அவர்களை புகைப்படம் எடுத்து அவரது ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் வெளியிட்டு விடுகிறார்.

நம்மைப் பொறுத்தவரை, இந்த நிலை இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் நீடிக்கும், அதன் பின் ‘பிரைவசி’யைக் காரணமாக வைத்து அவர்களாகவே இதிலிருந்து விலகிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

பார்ப்போம்…இன்னும் எத்தனை நாளைக்கு என்று…

Read Previous

‘ரவுடி’யாக நடிக்கும் சூர்யா…

Read Next

டிசம்பர் -13ல் ‘இவன் வேற மாதிரி’ ரிலீஸ்…