திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, சுரபி மற்றும் பலர் நடித்த ‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் அடுத்த மாதம் 13ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
‘கும்கி’ படத்திற்குப் பிறகு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்து வரும் படம் இது. சுரவி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
முதல் படத்தை வெற்றிப் படமாகக் கொடுத்த இயக்குனர் சரவணன், நடிகர் விக்ரம் பிரபு இருவருக்குமே இந்த இரண்டாவது படம் அவர்களது திரையுலக வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் படமாக அமையும்.
நல்ல மாதிரியா சொல்லியிருந்தால்…பிரச்சனை இல்லை…