தமிழ் சினிமாவுல ராசிக்கும், சென்டிமென்ட்டுக்கும் நிறையவே தொடர்பு உண்டு.
ஒரு படம் ஹிட்டாச்சின்னா, அந்த படத்தோட நாயகியையும் ராசியான நடிகைன்னு சொல்லி தொடர்ந்து பல படங்கள்ல நாயகியா நடிக்க வைப்பாங்க.
ஆனால், படம் ஓடலைன்னா, அந்த படத்தோட தோல்விக்கே அந்த நடிகையோட ராசிதான் காரணம்னு முத்திரை குத்தி காணாமல் போக வச்சிடுவாங்க.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தோட மாபெரும் வெற்றி அந்த படத்தோட ஹீரோயினுக்கு படம் மேல படம் வரக் காரணமா அமைஞ்சிருக்கு.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனா அறிமுகமாகற ‘பென்சில்’, அதர்வா நாகயனா நடிக்கிற ‘ஈட்டி’ , சுசீந்திரன் அடுத்து விஷ்ணுவை நாயகனா வச்சி இயக்கற ‘வீர தீர சூரன்’ என படம் மேல் படமாக அவருக்கு குவிகிறது.
ஸ்ரீதிவ்யா சீக்கிரமா முன்னணி ஹீரோயினா ஆகிடுவாங்க….