டிசம்பர் 6-ல் ‘கல்யாண சமையல் சாதம்’ ரிலீஸ்…

kalyana samaiyal satham_00008எவரெஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் பிரசன்னா, லேகா வாஷிங்கடன் மற்றும் பலர் நடித்துள்ள ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தை டிசம்பர் 6ம் தேதி உலகம் முழுவதும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசிஎஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள்  வெளியிடுகின்றன.

பல குறும்படங்களை இயக்கி விருதுகளை வென்ற ஆர்.எஸ். பிரசன்னா இந்த படத்தை இயக்குகிறார்.

ஒரு திருமணம் , அதைச் சுற்றி நடக்கும் பல வேடிக்கையான சம்பவங்களை மையமாக வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் இந்த படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பிரசன்னா நடித்துள்ள படம், அவருடைய ஜோடியாக லேகா வாஷிங்கடன் நடித்துள்ளார்.

டிசம்பர் சீசனில் கல்யாண நகைச்சுவை விருந்துக்கு தயாராகுங்கள்…

 

Read Previous

பல நட்சத்திரங்கள் நடித்த ‘ஜன்னல் ஓரம்’ 29ம் தேதி ரிலீஸ்…

Read Next

இமான் இசையைத் திருடியதா கன்னட சினிமா ?