பாலுமகேந்திராவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விக்ரம் சுகுமாரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிப்பில் “மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இசையை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது,
“சமீப காலமா திரைப்படங்களில் இந்த தேனி படாத பாடுபடுது. ஒரு காலத்துல நான் ‘மண்வாசனை’ படம் எடுத்துட்டு அதனோட ‘லேங்வேஜை’ மாத்தினேன்.
படம் மெட்ராஸ்ல ரிலீஸ் ஆகி ஓடுது..அது என்ன ஒண்ணுமே புரியலையேன்னு சொல்லிட்டாங்க.
அப்படி புரியாத ஒரு தமிழை ஒரு வாரம் கழித்து அனைவரும் புரிந்து கொண்டு வெற்றிப் படமாக்கினார்கள்.
கலாச்சாரப் பதிவு என்பது, புத்தகங்கள் வாயிலாகவோ, ஊடகங்கள் வாயிலாகவோ ஒரு பதிவு வேணும். என் மண்ணை சமீப காலமாக எல்லா இளைஞர்களும், நுகர்ந்து ஆசைப்பட்டு அங்கே போய் அதைப் பதிவு செய்யும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
சமீப காலத்தில் இளைஞர்கள் அற்புதகமாக நுழைந்து வந்திருக்கிறார்கள். அதிலும் கதை சொல்லும் விதம் மாறிவிட்டது. ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் மண்ணைப் பற்றி எனக்கு பெருமிதாக உள்ளது, ” என்றார் பாரதிராஜா.