இதோ வருகிறார்…அதோ வருகிறார்….என்று சொன்ன நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்க வந்து விட்டார்.
‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் அவர் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தை சந்தோஷ்குமார் ராஜன் இயக்குகிறார். ‘நெல்லை சந்திப்பு’ என்ற படத்தை இயக்கிய கேபிபி நவீன் இப்படத்திற்கு கதை எழுதுகிறார். வேலுமணி வசனம் எழுதும் இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பாக எல்.கே. சுதீஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பூஜை நாளை மறுநாள் 12ம் தேதியன்று நடைபெற உள்ளது.
மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.