இணைய தள திரையரங்கம் ஆரம்பம்…

pocket-popcornதிரைப்படங்களை திரையரங்குகளில் மட்டும்தான் பார்க்க வேண்டுமா, அவற்றை வீட்டிலிருந்தே பார்க்க முடியாதா ? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் ‘பாக்கெட் பாப்கார்ன்.காம்’ என்ற இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் இனி திரைப்படங்களை சட்ட ரீதியாக பார்க்கலாம். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நேரத்திலும் நீங்கள் புதிய  திரைப்படங்களை இதன் மூலம் பார்க்க முடியும்.

இதன்படி, இந்த இணையதளத்திற்குள் நுழைந்து பணம் செலுத்தி எந்த விளம்பர இடைவேளையில்லாமலும் படத்தை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு முறை பணம் செலுத்தினால் 24 மணி நேரத்திற்குள் அந்த படத்தை பார்க்க முடியும். படத்தை டவுன் லோட் செய்யும் வாய்ப்பு கிடையாது.

இந்த இணையதளங்களில் பல்வேறு திரைப்படங்களையும் திரையிடும் விதத்தில் ‘பாக்கெட் பாப்கார்ன்’ நிறுவனம் முயற்சித்து வருவதாக அதன் செயல் தலைவர் சிவகிரி கூறினார்.

 

Read Previous

யார் ‘புறம்போக்கு’ ? ஆர்யாவா ? விஜய் சேதுபதியா ?

Read Next

விஜயகாந்த் மகன் அறிமுகமாகும் ‘சகாப்தம்’

Most Popular