யார் ‘புறம்போக்கு’ ? ஆர்யாவா ? விஜய் சேதுபதியா ?

purampokku arya vijay sethupathyயுடிவி மோஷன் பிக்சர்ஸ் வழங்க, எஸ்.பி. ஜனநாதன் தனது தயாரிப்பு நிறுவனமான பைனரி பிக்சர்ஸ் கம்பெனியின் முதல் தயாரிப்பாக தயாரித்து இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தின் விளம்பர படப்பிடிப்பு டிசம்பர் 1ந் தேதி நடந்தது.

இப்படத்தின் விளம்பர படப்பிடிப்பில் தொடர் வெற்றி பட கதாநாயகர்களான ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்தார்கள்.

அப்போது, ஆர்யா , விஜய் சேதுபதியை பார்த்து படத்திற்கு ‘புறம்போக்கு’ என பெயர் வச்சிருக்காங்க! இதுல நான் புறம்போக்கா? இல்ல நீங்க புறம்போக்கா? என கேட்க… அதற்கு நான் கூட இருக்கலாம்! இல்ல நீங்களா கூட இருக்கலாம் என விஜய் சேதுபதி ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது இயக்குனர் இடையே நுழைந்துபொதுமக்களுக்கு பயன்படுற எல்லாமும், எல்லாருமே புறம்போக்கு தான். இப்ப உங்க ரெண்டு பேர்ல  யார் புறம்போக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்று சொல்ல மொத்த யூனிட்டுமே சிரிக்கத் தொடங்கியது.

புறம்போக்கு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் குலு மணாலியில் தொடங்குகிறது.

Read Previous

கவர்ச்சியாக நடிக்க வேண்டாமா, ஆச்சரியப்பட்ட நடிகை…

Read Next

இணைய தள திரையரங்கம் ஆரம்பம்…

Most Popular