சிவகார்த்திகேயன் படம்…கிளைமாக்சுக்கு மட்டும் 5 கோடி…

sivakarthikeyan and hansikaசிவகார்த்திகேயன் தற்போது ‘மான் கராத்தே’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். புதுமுக இயக்குனர் திருக்குமரன் இயக்கி வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார்.

இப்படம்தான் சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம்.

இப்படத்தின் இசை வெளியீடு காதலர் தினமான பிப்ரவரி 14 அன்றும், படம் ஏப்ரல் 11ம் தேதியன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பார்வை 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் 5 கோடி ரூபாய் செலவழித்து பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள். இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ் காட்சிக்கே இவ்வளவு செலவு என்றால் படத்தை எப்படி பிரம்மாண்டமாக உருவாக்கி வருவார்கள் என்பதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

இனி, சிவகார்த்திகேயன் படம் என்றால் சிக்கனமாக இருக்காதாம்…

Read Previous

விஜயகாந்த் மகன் அறிமுகமாகும் ‘சகாப்தம்’

Read Next

அஜித்துடன் நடிக்கிறாரா சிம்பு ?

Most Popular