‘வாலு, வேட்டை மன்னன்’ இந்த படங்களின் ரிலீசே எப்போது தெரியாது என்ற நிலையில் சிம்பு தற்போது பாண்டிராஜ் இயக்கும் படம், கௌதம் மேனன் இயக்கும் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இவற்றிற்கடுத்து சிம்பு , அஜித்துடன் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர், அவர் நடிக்கும் படங்களில் கூட அஜித்தின் ரசிகர் என காட்சிகளை வைப்பவர். அஜித் நடித்து ஒரு படம் வந்தால் அப்படத்தின் முதல் நாள் , முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பவர். சமீபத்தில் கூட ஆரம்பம் படம் வெளியான அன்று சென்னை, காசி திரையரங்கில் ரசிகர்களுடன்தான் படம் பார்த்தார்.
இந்நிலையில் அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய பேச்சுக்கு கௌதம் மேனன் அஜித்தை சென்று சந்தித்ததாகவும், அப்போது அஜித் அந்த படத்தில் சிம்புவும் நடித்தால் நன்றாக இருக்குமே என்று கூறியதாகவும், அதற்காக புதிதாக ஒரு கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து முறையாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இப்படி ஒரு செய்தி எப்படி கசிந்தது என்று தெரியவில்லை…