ஜப்பான் பறந்த சமந்தா…

samantha 1510_00017லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் 7ம் தேதி முதல் சமந்தா நடிக்க உள்ளார் என்றார்கள்.

ஆனால்,  ஒரு தெலுங்கு படத்திற்காக அவர்கள் சொன்ன நாட்களுக்கு இரு நாட்களுக்கு முன்பே சமந்தா ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அந்த தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், மற்றொரு தெலுங்கு படத்திற்காகவும் தேதிகளைக் கொடுத்துள்ளார் சமந்தா.

அதன் பின் ஜுனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு தெலுங்குப் படத்திலும் நடித்து விட்டு, அதன் பின் 23ம் தேதிதான் சமந்தா , சூர்யா நடிக்கும் படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதை சமந்தாவே ஏற்கெனவே தெரிவித்துள்ளார். அப்படியிருக்கு சமந்தா டிசம்பர் 7ம் தேதி முதல் தங்களது படத்தில் நடிப்பார் என லிங்குசாமி தரப்பு ஏன் செய்தியை வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

இந்த படம் தமிழில் தனக்கு ரீ-என்ட்ரி ஆக அமையும் என சமந்தா எதிர்பார்க்கிறார்.

 

Read Previous

அஜித்துடன் நடிக்கிறாரா சிம்பு ?

Read Next

ஆந்திராவில் அசத்தும் ‘ஆரம்பம்’

Most Popular