அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ மற்றும் பலர் நடித்த ‘ஆரம்பம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
இப்படம் ஆந்திராவில் ‘ஆட ஆரம்பம்’ என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்ப்பட்டு கடந்த வெள்ளியன்று வெளியானது.
அங்கு கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் முதலிடம் பிடித்து நல்ல வசூலை அள்ளி வருகிறது ‘ஆரம்பம்’.
நேரடி தெலுங்குப் படங்களை விட ‘ஆரம்பம்’ படத்தின் வசூல் அதிகமாகவே உள்ளதாம்.
இதுவரை அஜித் நடித்து டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ள படங்களை விட இப்படத்தின் வசூல் அதிகமாக உள்ளது என ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.