கூகுள் தேடல் – ஆந்திராவில் முதலிடத்தில் ‘துப்பாக்கி’…

thupakkiகூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் அதிகம் தேடப்படுபவர்களின் பட்டியலை வெளியிடும்.

இதில் ஆந்திராவில் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலும் வெளியானது.

தெலுங்கு நடிகர்களைப் பொறுத்தவரையில் தமிழிலும் நடித்து வரும் காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

த்ரிஷா நடித்து ஒரு நேரடி தெலுங்குப் படம் கூட இந்த ஆண்டு வெளி வரவில்லை என்றாலும் அவர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

அதிகமாக தேடப்பட்ட படங்களின் விவரம் பற்றிய பட்டியலில் நேரடி தெலுங்குப் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ‘துப்பாக்கி’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த படம் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளிவந்தது. தெலுங்கு ரசிகர்கள் ‘துப்பாக்கி’ படம் பற்றிய விவரங்களைத்  தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டியுள்ளனர் என்பது இதன் மூலம் புரிகிறது.

இந்த பட்டியலில் ‘விஸ்வரூபம்’ 7வது இடத்தையும் ‘சிங்கம் 2’ 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த ‘துப்பாக்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

வருத்தப்பட வைத்த ‘வாலிபர் சங்க‘ 100வது நாள் விழா…

Read Next

‘வீரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்…