ஒவ்வொரு வருடமும் ஆனந்த விகடன் பத்திரிகை, விகடன் விருதுகள் என்ற பெயரில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை அறிவித்து வருகிறது.
அந்த விதத்தில் 2013ம் ஆண்டிற்கான ‘விகடன் விருதுகள் 2013’ விருதுப் பட்டியல் இந்த வார விகடனில் வெளியாகியுள்ளது.
அவற்றில் திரைப்படத்துறை சார்ந்த விருதுகள் விவரம் வருமாறு…
சிறந்த படம் – பரதேசி
சிறந்த இயக்குனர் – பாலா (பரதேசி)
சிறந்த நடிகர் – அதர்வா (பரதேசி)
சிறந்த நடிகை – பூஜா (விடியும் முன்)
சிறந்த குணச்சித்திர நடிகர் – கிஷோர் (ஹரிதாஸ்)
சிறந்த குணச்சித்திர நடிகை – தன்ஷிகா (பரதேசி)
சிறந்த நகைச்சுவை நடிகர் – சென்ராயன் (மூடர் கூடம்)
சிறந்த நகைச்சுவை நடிகை – மதுமிதா (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
சிறந்த வில்லன் நடிகர் – அனில் முரளி ( 6 மெழுகுவத்திகள்)
சிறந்த புதுமுக இயக்குனர் – நலன் குமாராசாமி (சூது கவ்வும்)
சிறந்த புதுமுக நடிகர் – நிவின் பால் (நேரம்)
சிறந்த புதுமுக நடிகை – நஸ்ரியா நசீம் (நேரம்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – பிருத்விராஜ் தாஸ் (ஹரிதாஸ்)
சிறந்த இசையமைப்பாளர் – இளையராஜா (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)
சிறந்த ஒளிப்பதிவாளர் – செழியன் (பரதேசி)
சிறந்த படத்தொகுப்பாளர் – அல்ஃபோன்ஸ் புத்தரன் (நேரம்)
சிறந்த கதை – வி.இசட். துரை – 6 மெழுகுவத்திகள்
சிறந்த திரைக்கதை – நலன் குமரசாமி (சூது கவ்வும்)
சிறந்த வசனம் – நவீன் ஷேக் தாவூத் (மூடர் கூடம்)
சிறந்த சண்டைப் பயிற்சி – கேச்சா, லீ விட்டேக்கர், ரமேஷ் – விஸ்வரூபம்
சிறந்த நடன இயக்குனர் – பண்டிட் பிர்ஜு மஹாராஜ் (விஸ்வரூபம்)
சிறந்த கலை இயக்கம் – ‘தோர்’ தவிபசாஸ், லால்குடி ந. இளையராஜா (விஸ்வரூபம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, பெருமாள் செல்வம் (பரதேசி)
சிறந்த ஒப்பனை – ராலிஸ்கான், கேஜ் ஹப்பர்ட் (விஸ்வரூபம்)
சிறந்த பாடலாசிரியர் – நா. முத்துக்குமார் (ஆனந்த யாழை…-தங்கமீன்கள்)
சிறந்த பின்னணிப் பாடகர் – ஹரிஹரசுதரன் (ஊதாக் கலரு ரிப்பன்… – வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
சிறந்த பின்னணிப் பாடகி – சக்திஸ்ரீ கோபாலன் – (நெஞ்சுக்குள்ளே… – கடல்)
சிறந்த தயாரிப்பு – லோன் வுல்ஃப் புரொடக்ஷன்ஸ் ( ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)